பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் 



தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தான் அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தஞ்சை,நாகை,
திருவாரூர்,கடலூர்,விழுப்புரம்,அரியலூர்,ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 373 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கும் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி. ஆகியபொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.


" alt="" aria-hidden="true" />


இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென ஓட்டு மொத்த விவசாயிகளும் மத்திய,மாநில அரசுக்கு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன.தமிழகத்தில் விவசாயிகள் - பொது மக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச் சூழல் அனுமதி , மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகியவை தேவையில்லை என்று கடந்த 16ம் தேதி அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமில்லாது அனைத்து விவசாய பெருமக்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தி இருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழக அரசு செயல் படுத்த கூடாது என்றும் தஞ்சை நாகை திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் உட்பட பல்வேறு கட்சிகளும் தமிழக அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில் அதனை ஏற்று தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் கொண்டு வரவுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு என்பது பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு தமிழக அரசால் தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளதிற்கு நன்றியை தெரிவித்து கொள்ளும் அதே வேளையில்,பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டத்தை இனியும் காலதாமதம் செய்யாமல் வரும் 14-ம் தேதி கூடவுள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.