உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில், உள்ள தோம்ரி என்ற கிராமம் ஒன்றை தத்தெடுத்தும் உள்ளார் பிரதமர் மோடி
இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மங்கள் கேவத். இவரது மனைவி ரேணு தேவி. இந்த தம்பதியின் மகளுக்கு கடந்த 12ந்தேதி திருமணம் நடந்தது. இதற்கான முதல் அழைப்பிதழை டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேவத் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடியிடம் இருந்து கடந்த 8ந்தேதி கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு கேவத் மற்றும் அவரது குடும்பத்தினர் பரவசத்தில் ஆழ்ந்து விட்டனர்.
இதுபற்றி கேவத் கூறும்பொழுது, சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர் மீதும் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என்பதற்கு இந்த கடிதம் சான்று என கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க எங்களது குடும்பம் ஆவலுடன் உள்ளது என கேவத்தின் மனைவி ரேணு கூறியுள்ளார். எங்களுடைய குடும்பம் சந்தித்து வரும் கஷ்டங்களை பற்றி அவரிடம் எடுத்து கூறுவோம் என்றும் அவர் கூறினார்