இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், பிஎம்டபுள்யூ நிறுவனமும் அதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.\
சொகுசு கார் தயாரிப்பில் உலகின் முன்னோடி நிறுவனமாக திகழும் பிஎம்டபுள்யூ, இந்திய சாலைகளுக்கு ஏற்ற மின்சார காரை களமிறக்க திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு நிறுவனங்களும் புதிய மின்வாகனங்களை அவ்வப்போது விற்பனை கொண்டு வருகின்றன.
முன்னதாக விற்பனைக்கு அறிமுகமான மஹிந்திராவின் வெரிட்டோ, டாடா நிறுவனத்தின் டிகோர் கார்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இக்கார்களை தனிநபர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை விட, வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு உட்படுத்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.