விஜய் ரசிகர்களை கவர்ந்த மனோபாலா - அப்படி தான் செய்தார்

நடிகரும் இயக்குநருமான மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் மனோபாலா. அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். தனது நண்பர்களின் பிறந்தநாள் என்றால் முதல் ஆளாய் டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் மனோ பாலா, அவ்வப்போது போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்


இந்நிலையில் இன்று நடிகர் மனோ பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். காரணம் மனோ பாலா ஷேர் செய்த போட்டோ அப்படி. விஜய் படத்தில் அவர் பேசும் உசுப்பேத்துவறவங்கக்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்கக் கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். - இளைய தளபதி என காருக்கு பின்னால் எழுதப்பட்ட டயலாக்கை போட்டோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மனோ பாலாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டானர். தளபதி விஜய் அண்ணா பேசிய மேடைப் பேச்சு பல பேருக்கு பொருந்தி போகிறது என்று கூறியுள்ளார் இவர். உங்க காரா சார்? என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்