பொன் மாணிக்கவேலுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி இவர்தான்...? யார் இவர் ?

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அடுத்த சிலைக்கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.​​


சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில், தனது பணி ஓய்வுக்காலத்திற்குப் பிறகான ஓராண்டு கால பதவி நீட்டிப்பும் முடிந்ததை அடுத்து அடுத்த இந்த பிரிவிக்கு அடுத்த திகாரி நியமிக்கப்படுவார் என்று தகவ்ல்கள் வெளியாகின.

இந்நிலையில், மீண்டும் பொன் மாணிக்கவேலுக்கு பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரிய பொன்மாணிக்கவேலின் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

மேலும், ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி பொன் மாணிக்கவேல் விட்ட இடத்திலிருந்து ஐஜி அன்பு இதைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.